இன்றைய ராசிபலன் 07-11-2018

மேஷம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் வருகையும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்: அதிர்ஷ்டகரமான நாள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மிதுனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாள். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வருவது மகிழ்ச்சி தரும். சிலருக்கு மகான்களை தரிசிக்கவும் அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்டநாள்களாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள்வரவு சேரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

துலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

விருச்சிகம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் சந்தர்ப்பம் உண்டாகும்.

மீனம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும்.