மைத்திரிக்கு மஹிந்த விடுத்துள்ள அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்ததாக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச பேய் ஆவேசம் கொண்டதாகவும் மைத்திரி மற்றும் தமக்கிடையிலான இணைப்புக்கு பங்களிப்பு வழங்கிய எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா உட்பட அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக்கம் திரும்பிய மகிந்த ராஜபக்ச நாளைக்குள் “எனக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு திரட்டப்படவில்லை என்றால் என்னை கெட்டவன் என்று கூறவேண்டாம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரது தொலைபேசிகளும் சுவிச் ஓப் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தலால் ஜனாதிபதி உட்பட அவரது அணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.