நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி

இலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பிக்கவும், நிறைவு செய்யவும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்குமான அதிகாரம் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதுதான் தகுந்த நடவடிக்கையாக இருக்குமெனத் தான் கருதுவதாகவும், இல்லையென்றால் சிக்கலான நிலைமை ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.