இலங்கையின் பரபரப்பான சூழ்நிலைக்கு பின்னால் கரு ஜயசூரிய!

கரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இன்று உலக நாடுகள் இலங்கையை சந்தேக கண்ணுடன் பாரக்கும் நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பை மீறி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி செயற்பட வில்லை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட தீரமானத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரியவே இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான காரணமாவார். அவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்பதை மறந்து ஐக்கிய தேசிய கட்சியின் சபாநாயகராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக முறையாக பயன்படுத்த வேண்டும். என தெரிவித்தார்