நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சூழ்ச்சி என்ன? சதித்திட்டத்தின் பின்னணியில் பசில்! அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திடீர் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை தூண்டி விட்டதன் பின்னணியில், பசில் ராஜபக்ச உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்ச, தந்திரமான முறையில் ஜனாதிபதியை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்தேகம் கொண்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகளை, கொலை சூழ்ச்சி கதை ஊடாக திட்டமிட்டு ஊடகத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலம் உள்ளதாக கூறி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி கொண்ட பசில் ராஜபக்ச, அரசியலமைப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தி நாடாளுமன்றதை கலைப்பதற்கு ஜனாதிபதி தூண்டியுள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில் உடனடியாக இயங்கிய நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் அச்சமடைந்து இவ்வாறான ஆட்சி மாற்றத்தின் அவசியம் ஒன்று ராஜபக்ச குடும்பத்திற்குள் மற்றும், கூட்டு எதிர்க்கட்சிக்குள் அவசியம் என்பதனை பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராகிய பின்னர் வெளியிட்டப்பட்ட ஊடக அறிக்கையில் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய அவசியம் பற்றி சுட்டிக்காட்டப்பட்டது.

விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி ஆபத்திலுள்ள நாட்டினை மீட்கும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அனுமதிக்க வேண்டும் என ஊடக அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.