உச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள்தெரிவிக்கின்றன.இந்த வார இறுதியில் மஹிந்த ராஜபக்ச மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம்சோலி எதிர்வரும் 17ஆம் நாள் பதவியேற்கவுள்ள நிலையில், குறித்த நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 17ஆம் திகதி மாலைத்தீவுக்குச் செல்லவுள்ளார். இந்நிலையில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப்பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாட முடியும் என்றும் மஹிந்த ராஜபக்சவுக்குஆலோசனை கூறப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவுடனான எந்த அதிகாரபூர்வ தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மஹிந்த இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்து கலந்துரையாடலாம் என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. எனினும் மஹிந்தவின் மாலைதீவு விஜயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.