சர்வாதிகாரியாக மாறிய மைத்திரி! எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச நாடுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சர்வாதிகாரியாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றினை கலைத்துள்ளமை தொடர்பில் பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.

ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்னிலையாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். மைத்திரி ஒரு சர்வாதிகாரியை போல செயற்பட்டிருக்கின்றார்.

மேலும், நாளைய தீர்ப்பு நாட்டு மக்களுக்கு நன்மையை தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் ரீதியாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், உலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகங்கொடுத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக இலங்கை மீது பல்வேறு தடைகளை விதிக்க போவதாக சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.