தமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம்! இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை

இலங்கையின் போலிப் பிரதமர் எனப்படும் மகிந்தவின் கூட்டம் ஒன்றில் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவரின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் இந்தக் கொடியைப் பயன்படுத்தி இருப்பது வெட்கக் கேடானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த கொடியினை சிங்கள கடும்போக்குவாதிகள் தமது நிகழ்வுகளில் வெளிப்படையாக பயன்படுத்தி வந்தனர்.

இதனையொட்டி கடந்த காலத்தில் பல்வேறு தரப்புக்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ், முஸ்லிம் மக்களின் அடையாளங்களை மறைத்து இலங்கையை சிங்கள நாடாகவும் சிங்களவர்களுக்குரிய நாடாகவும் அக்கொடி சித்தரிப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த கொடியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட சில தினங்களில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவரது ஆதரவாளர் பயன்படுத்தியுள்ளமை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.