அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா

அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா

அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் ‘காகிதங்கள் பேசுதடி’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் அரியாலை சக்தி கலாசார மன்ற இயக்குநர் திரு. இராசையா மதிகரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் கே.என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் அகவணக்கத்தைத் தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் இரட்ணேஸ்வரன் அபிசாதனின் தாய் மொழி வாழ்த்திசைக்க, வட மாகாண சுகாதார திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி காந்தரூபன் கேமலாரூபினி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நல்லூர் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா, அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் அறக்காவலர் திரு. ஐயாத்துரை குமரதாசன் ஆகியோரின் ஆசியுரை, திரு. இராசையா மதிகரனின் தலைமையுரை, சிறுமிகளின் வரவேற்பு நடனம் என்பனவும் நடைபெற்றது. இதனையடுத்து வெளியீட்டுரையினை கம்பிகளின் மொழி பிறேமும் அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட உதவிப் பதிவாளர் திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வரனும் ஆற்றினர். தொடர்ந்து ‘காகிதங்கள் பேசுதடி’ கவிதை நூலினை நூலாசிரியர், நூலாசிரியரின் பெற்றோர், கம்பிகளின்மொழி பிறேம், காவலூர் அகிலன், விஜய் பதிப்பக உரிமையாளர் விஜய் ஆகியோர் வெளியீட்டு வைக்க, வட மாகாணசபை உறுப்பினர் திரு. கே. என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி தர்மனி ரஜீவன் அவர்களின் நயப்புரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் திரு. கே.என். விந்தன் கனகரத்தினம் சிறப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியரின் ஏற்புரையினையும், யாழ். கனகரட்கம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பாலவரதனின் நன்றியுரையியையும் தொடர்ந்து நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த வட மாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்கள் வரவேற்கப்படுவதனையும், மங்கலவிளக்கேற்றுவதனையும், சிறப்புரை ஆற்றுவதனையும் இன்னும் சிறுமியரின் வரவேற்பு நடனத்தினையும், ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.