இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக நாளைய தினம் இப்படியான அரசியல் தீர்ப்பை வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எதிர்ப்பார்த்து சர்வதேச உலகமும் காத்திருக்கின்றது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு ஒரு கறுப்பு புள்ளியாகவே இனி வரலாற்றில் பார்க்கப்படும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியல் யாப்புக்கு முரணானது என்று நாளைய தீர்ப்பு வழங்கப்பட்டால் நாடாளுமன்றம் கட்டாயம் கூட்டப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியை தேற்கடிப்பின் தீர்ப்பிக்கு பின்னர் மைத்திரிபால சிறிசேனவை பதவியில் இருந்து நிச்சயம் தூக்க முடியும் என்பதும் அரசியல் ஆர்வலர்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

எனவே இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றில் பாரிய திருப்பு முனையாக அமையவுள்ளது.

தீர்ப்பு எப்பொழுது வெளியாகும் என்ற பரபரப்பு சூழ்ந்துள்ளதுடன், தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மேற்குலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன.

இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுவந்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றினை கலைத்தது பிழை என தீர்ப்பு எழுதினால் இலங்கையின் நீதித் துறை தப்பினாலும் அடுத்தடுத்து பாரிய சிக்கல்கள் காத்திருக்கின்றன.

ஜனாதிபதியின் தீர்ப்பு சரி எனக் கூறினால் இலங்கை நீதித் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கையின் தலையெழுத்தும் மாறும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாளைய தீர்ப்பில் தான் இலங்கை வரலாற்று பக்கங்களின் பதிவு காத்திருக்கின்றது. பொருத்திருந்து பார்ப்போம் நாளைய தீர்ப்பு எப்படி அமைய போகின்றது என்பதை