இதுவொன்றும் இறுதி முடிவல்ல! உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வித்துள்ள இடைக்கால தடைவிதிப்பானது தற்காலிகமான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது இறுதி முடிவு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று மாலை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தற்காலிகமான ஒன்று.

இது இறுதி முடிவு கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை ஒத்திவைத்த பல சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்றிருந்தன. எவ்வாறாயினும், இறுதியில் பொதுமக்களே தீர்மானிப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து இன்று மாலை உத்தரவிட்டுள்ளது