தோல்வியின் விரக்தியில் ராஜபட்சே எடுத்த விபரீத முடிவு! பற்றி எரியும் இலங்கை!!

இலங்கை நாடளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் கலைக்கப்பட்டது, இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும் ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நேற்று ரணில் விக்ரமசிங்கே, அவரின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 10 மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரணில் விகரம்சிங்கேவின் மனுவை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்து தொடர்ந்து செயல்படும் என அறிவித்தது. இதனையடுத்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபச்சேவுக்கு எதிராக நமிபிக்கையில்லா தீர்மானம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று பல குழப்பங்களுக்கு இடையே தொடங்கிய இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபச்சேவுக்கு எதிராக நமிபிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில், இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று இலங்கை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். மேலும், கடும் அமளி காரணமாக, இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைப்பாதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 10.00 மணி அளவில் இலங்கை நாடாளுமன்றம் தொடங்கியது. அப்போது ராஜபச்சே தனது உரையை தொடங்க ஆரம்பித்தார். அதற்க்கு ரணிலின் ஆதரவாளர்கள் எழுந்து ராஜபச்சே ஒரு டம்மி என்று கத்தி கூச்சலாகித்தனர்.

இதன் காரணமாக ரணில் மற்றும் ராஜபக்சே ஆகிய இரு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பில் கொண்டு சென்று மோதல் உருவாக்கி பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்த மோதலில், ராஜபக்சே தரப்பு எம்.பி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சபாநாகர் கரு.ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.