ரணில், மைத்திரிக்கு இடையில் நீண்ட நேரம் பேச்சு! விரைவில் குழப்பங்களுக்குத் தீர்வு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளைய தினம் சந்தித்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமராக முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதை அடுத்து, அன்றைய தினத்திற்கு பின்னர் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் நெருக்கடி நிலைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.