இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சதி!

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த அமரவீர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சபாநாயகரே இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அதற்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின் கீழ் பிரதமரை அல்லது அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகரிற்கு இல்லை எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் நடுநிலையானவர் பக்கச்சார்பற்றவர் அவர் ஜனாதிபதி தெரிவிப்பதை விமர்சிக்க முடியாது எனவும் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய சபாநாயகர் தனது அதிகாரத்திற்கு அப்பால் சென்று நடவடிக்கைகளை எடுக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.