சஜித், ஐ.தே.கவை அழித்து விட்டு மஹிந்தவுடன்? மீண்டும் ஜனாதிபதியாக ஆசைபடும் மைத்திரி

ஜனாதிபதி பதவியை குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வை எங்களால் அனுமதிக்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் பொதுக் கூட்டம் நேற்று இரவு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு நான்கரை வருடங்களுக்கு பிறகுதான் உள்ளது. இதுபற்றி விளக்கம் தெரியாத ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தை பத்தாம் ஆண்டு மாணவனிடம் கொடுத்தாலே அவன் அதனை தெளிவாக வாசித்து சொல்லுவான். அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.