9 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உயிராயுதம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரின் முக்கிய ஆவணம் ஒன்று, நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆனந்தபுரப்பகுதியில் உக்கிர சமர் இடம்பெற்றுள்ளது.

இதன்போது விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினரின் தாக்குதல் குறித்த பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 9 வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் போரியல் (வரலாற்றுத்) தடயங்கள் தற்பொழுதுவரை அந்தப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரின் உயிராயுதம் என்ற சின்னம்ஒன்று அந்தப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மில்லர் என்று விடுதலைப் புலிகளினால் அழைக்கப்பட்ட வல்லிபுரம் வசந்தன் என்பவர் 1987ஆம் ஆண்டு முதன் முதலில் யாழ் – நெல்லியடிப்பகுதியில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது கரும்புத்தாக்குதல் நடத்தி வீரகாவியம் படைத்தார்.

இவரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்ந்துள்ளது. மகளீர் உட்பட சுமார் 400க்கு மேற்பட்ட கரும்புலி போராளிகள் இலங்கை முப்படையினரின் முக்கிய தளங்களையும், கடற்கலங்களையும், விமானங்களையும் தாக்கி அழித்து வீரகாவியம் படைத்ததாக செய்தி தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.