மன்னிப்பு கோரிய சஜித்! பதவி விலகியிருப்பேன்

மிருகங்களை இழிவுபடுத்தியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனவிலங்குகளை போன்று செயற்பட்டதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எனது கூற்றை வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். காட்டு விலங்குகளை விடவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழிவாக செயற்பட்டனர்.

மிருகங்களை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை.எனக்கு பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எவ்வித அச்சமும் இன்றி பதவியிலிருந்து விலகியிருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.