பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வு!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னாள் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன் , பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டது.

அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது. இதன் கலந்துகொண்ட உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தது .