சண்டித்தனமாக பதவியில் இருக்க முடியாது! மகிந்தவுக்கு எச்சரிக்கை

சண்டித்தனமாகவும், பலவந்தமாகவும் பதவியில் இருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை நீக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவையும் சட்டவிரோதமானது என நிரூபித்து அதற்கான தடையுத்தரவினை பிறப்பித்து உயர் நீதிமன்றம் நீதியின் அதிகாரத்தை நிரூபித்துள்ளது.

நிறம் மற்றும் பெயர் அடிப்படையில் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளவரே பிரதமராக தெரிவுசெய்யப்படுவார்.

எவ்வாறாயினும், சண்டித்தனமாகவும் பலவந்தமாகவும் நீதியினை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நீதிமன்றம் இன்று நிரூபித்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.