ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்த விடயங்களினால் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதிக்கு என்ன தேவை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது, நாடாளுமன்றமே யாரை பிரதமராக நியமிப்பது என்பதனை தீர்மானிக்க வேண்டும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியனவற்றின் தீர்ப்புக்களை வரவேற்கின்றோம்.

இன்று இலங்கையில் இந்திய உச்ச நீதிமன்றத்தினைப் போன்றே சுயாதீனமான நீதிமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்கு நாம் அஞ்சியது கிடையாது அனைத்து கட்சிகளும் தேர்தலைக் கோரினால் நாம் மட்டும் தேர்தலை நிராகரிக்க முடியாது.

எனினும் தேர்தலை நடத்த முன்னதாக சட்ட ரீதியான அரசாங்கமொன்று இருக்க வேண்டும்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

அரசியல் அமைப்பிற்கு புறம்பான வகையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.

அரசியல் சாசனத்தை மீறி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த யாரும் முயற்சிக்கக் கூடாது, ஹிட்லரைப் போன்று செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.