விடுதலைப் புலிகளின் பெயரில் திடீரென வெளியான அறிக்கை…..

விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், குறித்த அறிக்கையின் உண்மைத் தன்மை மற்றும் பின்னணி குறித்து இந்திய புலனாய்வு பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோரின் கையொப்பத்துடன், சுவிட்ஸர்லாந்தில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோர் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மிகவும் தீவிரமாக செயற்படுகின்றனர்.

இந்நிலையிலேயே, குறித்த அறிக்கை தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like