மகிந்தவின் நெருக்கத்திற்குரிய பெண் விடுத்துள்ள அறிவிப்பு

உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர இன்று பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் 502ஆம் இலக்க மண்டபத்தில் ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார, விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் அமர்வு இன்று கூடியது.

ஈவா வனசுந்தர தனது 40 ஆண்டு கால சேவையை நிறைவு செய்து இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக நீதியரசர் விஜித் மலல்கொட இதன்போது தெரிவித்தார்.

அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நீதியரசர் புவனேக அலுவிகார கூறியுள்ளார்.

இதன் பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், நீதியரசர் வனசுந்தரவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது 40 ஆண்டு கால சேவையை பாராட்டியுள்ளார்.

ஈவா வனசுதந்தர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதுடன் ஈவா வனசுந்தர அந்த விசாரணை அமர்வில் அங்கம் வகிக்க கூடாது என ரணில் விக்ரமசிங்க தரப்பில் நேற்று இரண்டு கோரிக்கை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.