சர்ச்சைக்கு மத்தியில் பதவி பிரமாணம் செய்த விஜயகலா! கடுப்பாகிய தென்னிலங்கை மக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலை புலிகள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனும் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விடுதலை புலிகளில் சர்ச்சை கருத்தை அடுத்து இராஜாங்க அமைச்சு பதவியை இழந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் தற்போது பதவி பிரமாணம் செய்திருப்பது தென்னிலங்கை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

அத்துடன் இன்று நியமிக்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் பின்வருமாறு,

பைசல் காசிம் – சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

அமீர் அலி – விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

நளின் பண்டார – சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சராக பதவியேற்றார்

ருவன் விஜயவர்த்தன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

புத்திக்க பதிரன – தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக பதவியேற்றார்

நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

அலி சாஹிர் மௌலானா – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

சுஜீவ சேனசிங்க – அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக பதவியேற்றார்

எரான் விக்கிரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

அஜித் பி. பெரேரா – டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார் (அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்)

ஜே.சி. அலவத்துவள – உள்ளூராட்சி, மாகாணசபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றார்

ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

விஜயகலா மகேஸ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

ஹர்ஷ டீ சில்வா – பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோகம் அமைச்சராக பதவியேற்றார்