வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை ..பாவனையாளர் அதிகார சபை…

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை ..பாவனையாளர் அதிகார சபை…

 

இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின் அலுவலகத் தினால் பொது மக்களினதும் மற்றும் வர்த்தகர்களின் நலன் கருதி விற்பனை செய்யப்படும் அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான விலை விபரங்களை அறிவித்துள்ளது,
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களுக்கான அலுவலகத் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
அண்மை நாட்களாக வடக்கு மாகாணத்திற் குட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் அரிசி வகைகளின் விலைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக நுகர்வோரினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து எமது அதிகாரிகள் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில்,
நுகர்வோர், மற்றும் சில வர்த்தகர்கள் தமக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய,
2003, ஆம் ஆண்டின் 09, ஆம் இலக்க பாவனையாளர் அதிகார சபைச் சட்டம் 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் பிரகாரம் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அதிகார சபையானது அரிசி வகைகளின் ஆகக்கூடிய சில்லறை விலைகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த விலை விபரங்களுக்கு மேலாக உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது வியாபாரிகள் எவரும் விற்பனை செய்யவோ அல்லது விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்கு கோரவோ அல்லது விற்பனைக்காக காட்சிப் படுத்தவோ முடியாது என கட்டளை இடுகின்றது. இதனடிப்படையில்,
சம்பா அரிசி (கீரி சம்பா, சூதுரு சம்பா தவிர்ந்தவை ) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. கிலோ ஒன்று 90, ரூபாவும்,
இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 80, ரூபாவுமாக விற்பனை செய்யப்பட வேண்டும்.
நாட்டு அரிசி, உள்ளூரில் உற்பத்தி செய்யப் பட்டது கிலோ ஒன்று 80, ரூபாவும்,
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ ஒன்று 72, ரூபாவுமாக விற்பனை செய்யப்பட வேண்டும்.
நாட்டுப் பச்சை அரிசி,
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டது கிலோ ஒன்று 78, ரூபாவும், இறக்குமதி செய்யப் பட்டது கிலோ ஒன்று 70, ரூபாவுமாக விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த விலை விபரமானது நடப்பாண்டின் பெப்ரவரி மாதம் 17, ஆம் திகதி தொடக்கம் நடை முறையில் உள்ளது.
இவ் விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நுகர்வோர் அரிசி கொள்வனவு செய்த போது வழங்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விற்பனை சிட்டையில் திகதி, செலுத்தப்பட்ட விலை, கொள்வனவு செய்யப்பட்ட தொகை என்பவை உள்ளடங்கலான விவரங்களுடன் 90, நாட்களுக்குள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை,
முதலாம், இரண்டாம் மாடிகள், சர்வதேச செயலகக் கட்டிடம், த. பெ. இல. 1581,
27 வொக்சோல் வீதி,
கொழும்பு -02, என்ற
அலுவலக முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அறிவிக்க வேண்டும்.

தொலைபேசி மூலமாக தகவல்களை வழங்குவதாயின்,
வவுனியா – ‎024 – 7755455,
முல்லைத்தீவு – ‎021 – 2290134,
மன்னார் – ‎023 – 7755455,
கிளிநொச்சி – ‎021 -7755456,
யாழ்ப்பாணம் – ‎021 -7755455,
ஆகிய இலக்கங்கள் ஊடாக தகவலை வழங்க முடியும்.
இதனை விட நேரடியாக பாவனையாளர் அதிகார சபையின் தலைமைச் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவின் ‎011 -7755481, என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது ‎011 – 2321696, என்ற தொலை நகல் (பக்ஸ் ) மூலமாகவோ தகவல்களை நுகர்வோர் வழகியவுடன் துரிதமாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என நூகவோர் அலுவல்கள் அதிகார சபையின் அலுவலகத் தகவலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.