மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு  முதலமைச்சர் விசேட சந்திப்பு.

இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் இவ்விஜயத்தின் போது வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கலந்த்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களும் ஏனைய பங்குக் குருக்களும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவர் அவர்களும் தொழிலதிபர் றோஜன் அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் பங்குப்பற்றியிருந்தனர். இவ்விசேட சந்திப்பானது சமயங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அறியக்கிடைகின்றது, இவ்விசேட கலந்துரையாடலின் பின்னர் முதலமைச்சர் அவர்கள் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களையும் சென்று பார்வையிட்டிருந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like