வட மாகாண ஆளுநராக சுமந்திரனின் நண்பன்! வெடித்தது புதிய சர்ச்சை

வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நெருக்கிய நண்பரான சுரேன், ஆளுநராக நியமிக்கப்பட்டமையே சர்ச்சை நிலைக்கான காரணமாகும்.

சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற காரணத்தினால் சுரேன், வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதாக ஒருதரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளதாக தெரிய வருகிறது.

மஹிந்த தனக்கு நெருக்கமான ஒருவரை ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தார், எனினும் அதனை நிராகரித்த மைத்திரி, சுமந்திரனின் நெருக்கிய நண்பரான சுரேன் ராகவனை ஆளுநராக நியமித்திருந்தார்.

இந்த நியமனம் குறித்து தென்னிலங்கை அரசியல் பெரும் சர்சைகளும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

சுமந்திரனும் சுரேனும் கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். நெருக்கமான நட்பின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைளையும் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் என்பதால் இன்னும் நெருக்கும் அதிகம் என தெரிய வருகிறது.

சுரேனை வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சுமந்திரன் செயற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் 15 ஆசனங்களை பெற்றது.

எனினும் சுமந்திரனின் அரசியல் செயற்பாடு கிழக்கு மகாாணத்தை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநரை நியமிப்பது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை.

ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், முதன் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து சுரேன் பேசியிருந்தார். இந்த சந்திப்பும் சுமந்திரனின் ஏற்பாட்டுக்கு அமைய மேற்கொள்ப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமான ஆளுநர் வட மாகாணத்தில் உள்ளதால், சுமந்திரனின் ஆலோசனைக்கு அமைய அவர் செயற்படக் கூடும் என பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து தென்னிலங்கையில் மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பதை மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.