ஐ நா திறமையாக செயற்பட்டுருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள்..வடக்கு முதல்வர்…

ஐ நா திறமையாக செயற்பட்டுருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள்..வடக்கு முதல்வர்…

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என இன்றைய தினம் முதலமைச்சரை சந்தித்த ஐ நா வின் அபிவிருத்தி  செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்…அவர் மேலும் தெரிவிக்கையில்..ஐக்கிய நாடுகள். சபையானது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள் இதனை ஏற்று கொள்ள முடியாது ஏற்கனவே மத்திய அரசு மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது…எனவே அதனை ஏற்க முடியாது..இனிவரும் காலத்திலாவது ஐ நா இதனை திருத்தி மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும் எனவும் தெரிவித்தார்…குறிப்பாக போர் இடம்பெற்ற 2009 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இறக்காது காப்பாற்றி இருக்கலாம் இனியும் அவ்வாறான ஒரு தவறை ஐ நா விட கூடாது என முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்..