காது நம நமன்னு அரிக்குதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

பொதுவாக சிலருக்கு தடிமன் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்து காதுகளில் அரிப்பும் ஏற்பட்டு விடுகின்றது.

இதற்கு காரணம் காதுகளின் உள்ளே இருக்கும் சிறிய நார்களே. இது நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு அப்படியே காது தொற்றாக மாறி நமக்கு பல வகையான நோய்களை உருவாக்கிவிடுகின்றது.

இப்படி அரிப்பு ஏற்படுகின்றது போது காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றினால் நல்ல பயனை காணலாம்.

  • தலையை ஒரு பக்கமாக சரித்து கொண்டு 3-4 சொட்டுகள் கற்றாழை ஜெல் சாற்றை காதில் விடலாம்.
  • இது காதின் pH அளவை சமநிலைக்கு கொண்டு வருகிறது. இதனால் அரிப்புற, வறட்சி மற்றும் தொற்று குணமாகி விடும்.
  • வெதுவெதுப்பான இஞ்சி ஜூஸை எண்ணெய்யுடன் சிறிது கலந்து காதின் ஓட்டை பகுதியில் தடவி விடுங்கள். காதுக்குள் நேரடியாக ஊற்ற வேண்டாம்.
  • தேங்காய் எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் ஆயில், டீ ட்ரி ஆயில் போன்றவற்றை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக காதில் ஊற்ற வேண்டும். வெளியே வரும் எண்ணெய்யை ஒரு பஞ்சை கொண்டு துடைத்து விடுங்கள்.
  • நசுக்கிய பூண்டு துண்டுகளை ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். எண்ணெய்யை வெதபவெதுப்பாக காதில் இட வேண்டும். இதுவும் அரிப்பு நீக்க உதவுகிறது.