மகிந்தவால் கொழும்பில் வீட்டை இழந்த சம்பந்தன்! இப்படியும் ஒரு தலைவரா??

எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்தை காலி செய்து, ‘வசதி குறைந்த’ வீட்டிற்கு குடிபெயரும் சம்பந்தன்!

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை, மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதம் மூலம் இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்திலிருந்து இரா.சம்பந்தன் வெளியேறிவிடுவார் என தெரிகிறது.

சபாநாயகரின் கடிதத்திற்கு இரா.சம்பந்தன் தரப்பிலிருந்து ஆட்சேபணையெதுவும் தெரிவிக்கப்படவில்லையென் பிரதிசபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் வாசஸ்தலத்திற்கு மாறும்வரை, கொழும்பிலுள்ள பிறிதொரு வீட்டில் இரா.சம்பந்தன் வசித்து வந்தார். வசதி குறைந்த, சிறிய அறை போன்ற அந்த வீட்டில் இரா.சம்பந்தன் வசிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்சவிற்கு, முன்னாள் ஜனாதிபதியென்ற அடிப்படையில் தற்போது விஜேராம மாவத்தையில் உத்திாகபூர்வ வாசஸ்தலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல விமர்சனங்கள் சம்பந்தன் மீத முன்வைக்கப் பட்டாலும் இன்றுவரை ஏழ்மையாக வாழும் ஒரு அரசியல் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.