இலங்கையில் நடந்த அதிசயம்..! சாதனை படைத்த வைத்தியர்கள்

அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஹோமாகம வைத்தியசாலையில் இந்த சந்திரிசிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

குறித்த நபர், பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நியாஸ் என்ற 56 வயதுடைய நபரென்பது குறிப்பிடதக்கது.

எனினும் குறித்த நபருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டிரான்ரல் எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்டோனிக் (Transoral endoscopic transonic)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார்.

இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.