யாழில் கிணறுகளை காணவில்லை!

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகளில் இருந்த கிணறுகள் பலவற்றைக் காணவில்லை என்ற குறிப்பிடப்படுகின்றது.

இன்று மக்கள் பாவனைக்காக வலி.வடக்கு தையிட்டியில் 19 ஏக்கர் காணிகள் கையளிக்கப்கட்டுள்ளன.

இராணுவத்தினரால் தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவசிறியிடம் உத்தியோக பூர்வமாக காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

தையிட்டி வடக்கு, தெற்கு 249,250 பிரிவுகளுக்குரிய காணிகளே கையளிக்கப்பட்டுள்ளன.

முப்பது வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்போது 25 வீடுகள் உள்ளன.

எனினும் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகளில் இருந்த கிணறுகள் பலவற்றைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வீடுகளில் இருந்த மலசல கூடக் கோப்பைகள் பெயர்க்கப்பட்டு, அந்த இடங்களில் போத்தல்களால் மறைக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தினர் தாம் புதிதாகக் கட்டிய கட்டடங்களையும் இடித்துத் தரமட்டம் ஆக்கியுள்ளனர்.