யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீர் ஏற்றம்

யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீர் ஏற்றம்

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் மரக்­கறி வகை­க­ளின் விலை­கள் நேற்­றுச் சடு­தி­யாக அதி­க­ரித்­துக் காணப்­பட்­டன.
சித்­தி­ரைப் பௌர்­ணமி மற்­றும் ஆல­யங்­க­ளில் இடம்­பெ­றும் வரு­டாந்­தத் திரு­வி­ழாக் களால் மக்­கள் கூடு­த­லாக மரக்­கறி பாவ­னை­யி­லேயே ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இதன் கார­ணத்­தால் சித்­தி­ரைப் பௌர்­ணமி தின­மான நேற்று மரக்­கறி வகை­கள் சடு­தி­யாக அதி­க­ரித்­தன.
திரு­நெல்­வேலி, மரு­த­னார்­ம­டம், சுன்­னா­கம், சங்­கானை போன்ற சந்­தை­க­ளில் மரக்­கறி வகை­கள் போதி­ய­ளவு வந்­தா­லும் அவை உட­ன­டி­யாக விற்று தீர்ந்­தன.
சகல மரக்­கறி வகை­க­ளும் கிலோ 150 ரூபா­வுக்கு மேல் விற்­கப்­பட்­டன. இந்த மரக்­கறி விலை அதி­க­ரிப்­பால் நுகர்­வோர் பாதிக்­கப்­பட்­ட­னர். அனே­க­மான இடங்­க­ளில் மரக்­கறி வகை­க­ளுக்­குப் பற்­றாக்­கு­றை­யும் நில­வின. கூடு­த­லாக பயிற்­றங்­காய், பாவற்­காய்க்கு இந்த பற்­றாக்­குறை ஏற்­பட்­டுக் காணப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like