இலங்கைக்கு என்னை அனுப்பாதீர்கள்! புலம்பெயர் தேசத்தில் கதறி துடிக்கும் தமிழ்ப்பெண்

இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.அவருக்கு அப்போது அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

இதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.பின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.தனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை இருவரும் செய்து வந்தனர்.

இந்நிலையில், தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.காரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like