தென்னிந்தியாவில் பலரும் நினைக்காத காரியத்தை செய்த ஈழத்தமிழன்! குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் தொடரின் இயக்குனராக ஈழத் தமிழன் சூரியப்பிரதாப் சூரியமூர்த்தி தடம் பதிக்கிறார்.மேலும் யாரும் நினைக்காத காரியத்தை செய்து முடித்ததால் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் புதல்வியம் திரைப்பட தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் இணையத் தொடர் வெளியில் வெளிவரவுள்ள நிலையில் இந்த தொடரின் இயக்குனராக ஈழத்து தமிழன் சூரியப்ரதாப் பணியாற்றுவது ஈழத்தமிழர்களின் பங்களிப்பு தென்னிந்திய திரைப்படத் துறையில் அதிகரித்துவருவதை காட்டுகின்றது ,

கடந்த நவம்பர் 29 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 திரைப்படமானது தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும் .

அத் திரைப்படத்துக்கு ஈழத் தமிழரான லைக்கா சுபாஷ்கர் அவர்களின் நிறுவனம் 543 கோடியினை முதலீடாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது ,

பொன்னியின் செல்வன் ,கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமாகும் .1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டத்தில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது .

தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டு பல பதிப்புகளை கண்டுள்ளது . கி.பி. 1000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சோழப்பேரசை அடிப்படையாக கொண்டு இந்த வரலாற்று புதினம் பயணித்திருக்கிறது ,

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார்.

எனினும் முயற்சி கைகூடவில்லை .இவ்வாறு இருந்தபோதும் அந்த முயற்சியினை சௌந்தர்யா -சூரியப்பிரதாப் இணைந்து எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது .