இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் மக்கள்

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில் இந்த நீரூற்று காணப்படுகிறது.

வரட்சியான காலத்திலும் நீர் வற்றிப் போகாமல் 24 மணித்தியாலமும் நீர் வெளியேறும் இயற்கையின் கொடையாக இந்த நீரூற்று அமைந்துள்ளது.

அந்தப் பகுதி மக்கள் நீரூற்றினை பிபிலி அராவ என்ற பெயரில் அழைக்கின்றனர்.

கெப்பட்டிபொல நகரத்தில் இருந்து பெரலந்தனை வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு காடு போன்ற பகுதியில் இந்த நீரூற்று காணப்படுகின்றது.

7 அடி ஆழமான இந்த நீரூற்றின் மேல் பகுதியில் தொட்டி போன்று பொது மக்கள் அமைத்துள்ளனர். அதற்கமைய அதன் 2 பக்கங்களில் இருந்து 24 மணி நேரமும் மிகவும் சுத்தமான நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

எவ்வளவு வரட்சியான காலநிலை ஏற்பட்டாலும் இந்த நீரூற்றில், குறைவின்றி நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீரூற்றில் இருந்து வெளியேறும் நீரினை மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.

வரட்சி ஏற்படுகின்ற காலங்களில் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிசய நீருற்றில் நீரினை பெற்று நன்மை அடைகின்றனர்.

இந்த நீரூற்று இயற்கையினால் கொடுக்கப்பட்ட அதிசயம் என அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.