யாழில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவர் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் பல தகவல்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி உணவகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்தில் பத்து லட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் சகோதரன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரினுடைய வாக்குமூலத்துக்கமைய இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யயப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்ட பணத்திலிருந்து புதிதாக வாங்கியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள் கள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உண­வ­கத்­தில் திரு­டி­ய­வர் தொடர்­பான விவ­ரங்­களை முக­நூ­லில் பதி­வு­செய்து, அது பற்­றித் தக­வல் கிடைத்­த­தால் முதல் சந்­தே­க­ந­பர் பிடி­பட்­டார். அவரை, சாவ­கச்­சே­ரி­யி­லி­ருந்து முல்­லைத்­தீ­வுக்­குச் சென்று மக்­க­ளின் உத­வி­யு­டன் பிடித்து சாவ­கச்­சே­ரிக்­குக் கொண்­டு­ வந்து பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­தார் உண­வக நடத்­து­நர்.

இந்­தத் திருட்டு சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு அரு­கில் உள்ள உண­வ­க­மொன்­றில் கடந்த ஜன­வரி 8ஆம் திகதி இரவு இடம்­பெற்­றது.

ஓடு பிரித்து உள்­நு­ழைந்த திரு­டன் முத­லில் கடை­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மறை­கா­ணி­க­ளின் செயற்­பா­டு­களை நிறுத்­தி­விட்டு உண­வ­கத்­துக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 7 லட்­சம் ரூபா பணத்­தை­யும் 3 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான அலை­பேசி மீள் நி­ரப்பு அட்­டை­க­ளை­யும் திரு­டிச் சென்­றுள்­ளார்.

அது தொடர்­பில் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்து தானும் விசா­ர­ணை­யில் இறங்­கி­னார் கடை நடத்­து­நர்.

கடைக்­குள் செய­லி­ழக்­கா­மல் இருந்த மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் அதற்கு முன்னையநாள்­க­ளில் கடைக்கு வந்­தி­ருந்­த­வர்­கள் தொடர்­பா­கப் பார்­வை­யிட்­ட­போது முதல் நாளில் அங்கு உண­வ­ருந்த வந்­தி­ருந்­த­வ­ரும் திருட்­டின் போது செயற்­பட்ட மறை­கா­ணிப் பதி­வில் காணப்­பட்ட நப­ரும் ஒரே மாதி­ரி­யாக இருந்­துள்­ளார் என்­பதை இயன்­ற­ளவு உறுதி செய்­து­கொண்­டார்.

அந்­தப் படங்­களை முக­நூ­லில் பதிவு செய்து அவர் தொடர்­பான விவ­ரங்­க­ளைத் தமக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­மா­றும் இந்­தத் தக­வலை அனை­ வ­ருக்­கும் பகி­ரு­மா­றும் வேண்­டு­ கோள் விடுத்­தி­ருந்­தார்.

இந்­தப் பதி­வைப் பார்த்த முல்­லைத்­தீவு உடை­யார் கட்­டைச் சேர்ந்த ஒரு­வர் அங்குள்ள ஒருவர் பற்றிக் கடை உரி­மை­யா­ள­ருக்கு தக­வல் வழங்­கி­யுள்­ளார்.

உண­வக உரி­மை­யா­ளர் நேற்­று­முன்­தி­னம் சில­ரு­டன் அங்கு சென்­ற­போது இவர்­க­ளைக் கண்­ட­தும் சந்தேக நபர் அங்­கி­ருந்து தப்­பி­யோட முயற்­சித்­துள்­ளார். பொது­மக்­க­ளின் உத­வி­யு­டன் அவர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­டார்.

அவரை வாக­னத்­தில் கொண்­டு ­வந்து சாவ­கச்­சே­ரிப் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

பொலி­ஸார் இந்த நபரை உண­வ­கத்­துக்கு முன்­பாக சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­கள் வைத்­தி­ருந்­து­விட்­டுக் கொண்டு சென்­றுள்­ள­னர்.

இந்த நிலையில் இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.