யாழ்ப்பாண மேயர் செய்த செயல்….விளாசி எடுக்கும் மக்கள்

ஒரு நிகழ்வுக்கு தலைமை தாங்குபவர் தலைவர் ஆவார். அவர் தலைவருக்கு உரிய கதிரையில் இருப்பார். அந்த நிகழ்வில் ஜனாதிபதியே வந்திருந்தால் கூட அந்த கதிரையில் அவர் இருக்க முடியாது மேலும் இருப்பதும் இல்லை.

அதே மாதிரி பள்ளிக்கூடம் ஒன்றில் அதிபர் என்பவரது அலுவலகத்துக்கு கல்வி அமைச்சர் வந்தால் கூட அதிபரின் கதிரையில் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது.

இப்படியான பதவிகள் என்பது தனியார் நிறுவன பதவிகள் போன்றவை அல்ல. தனியார் நிறுவன முகாமையாளர்கள் தான் மேலதிகாரிகளை கண்டால் உடனே எழுந்து தங்கள் கதிரையை அவர்களுக்கு கொடுப்பார்கள். ஏனெனில் அந்த மேலதிகாரிகள் வருவதே அவர்களின் செயல்திறனை பார்க்க தான்

ஒரு நகரத்தின் மேயர் என்பது சாதாரண பதவி அல்ல. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நகரத்தின் தலைவர் ஆவார். அந்த நகரத்திற்கு யார் வந்தாலும் நகர தலைவரை வந்தவர் தான் போய் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஒழுங்கமைப்பு படி மேயர்க்கு மேலே எவரும் இல்ல. அமைச்சர் என்பது மேயருக்கான மேலதிகாரி அல்ல. அமைச்சர், ஆளுநர் எல்லோருமே மேயர் போன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே ஆவர்.

தன்னுடைய சீட்டை விட்டு எழுந்து அதை அமைச்சருக்கு விட்டு கொடுத்தது என்பது அடிமை தனத்தின் ஒரு வெளிப்பாடகவே பலரால் பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து மேலதிகாரிகளை கண்டு எழும்பி விட்டு கொடுத்து விடுவதுபோல் இந்த செயல் இருக்கிறது என மக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.