அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு….

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு….

மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும்; இடையே சுமூகமான உறவு ஏற்படுத்தப்படாமல் இருப்பது வடக்கின் தொழில்துறை விருத்திக்கு பாரிய தடையினை ஏற்படுத்தியுள்ளது என யாழ் மாவட்ட வர்த்தத்துறை பிரதிநிதிகள் அமெரிக்க குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பில் ஜோன்சன், அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அட்ருள் கேஷப் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தக துறை பிரதிநிதிகளை நேற்றைய தினம் யாழ் ஜெட்வின் விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். மேற்குறித்த கலந்துரையாடலின் போதே மேற்கெண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ் மாவட்ட வர்த்தக துறை பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்
இது ஆக்க பூர்வமான சந்திப்பாக இருந்தது. எமது நாட்டில் சுமூகமான அரசியல் தீர்வு ஒன்று விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.
சமூகப்பிரச்சனைகள் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிப்படைதல் என்பன தொழில் துறை விருத்தி அடையாத காரணத்தால் அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டியதுடன் தொழில்துறை விருத்தி செய்யப்படுமிடத்து வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்றும் அதை எமக்கு ஏற்படுத்தி தருமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.
உள்ளுர் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு பல தடைகள் காணப்பகிறது. வெளிநாட்டில் உள்ள எமது புலம் பெயர் தமிழர்கள் இங்கு முதலீடுகளை செய்வதற்கு பாரிய தடைகள் காணப்படுகிறது ஏதோவெரு விதத்தில் தடுக்கப்படுகிறது. எமது புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை சுதந்திரமாக செய்வதற்கு தடங்கல் உள்ளது அவற்றை சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.
மேலும் எமது பிரதேசத்தல் உள்ள அரசியல் விஸ்தீரணமற்ற தன்மை மிக முக்கிய காரணம். அத்துடன் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையில் உள்ள அதிகாரங்கள், நல்லதொரு உறவின்மை போன்ற காரணத்தினால் வடக்கில் தொழில் துறை வளர்ச்சிக்கு பாரிய தடையாகவுள்ளது. இவர்கள் இருபகுதியினரும் எதிர் எதிர் கருத்துக்களை கொண்டு இருப்பது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ளது. என தெரிவித்திருந்தோம்
அதற்கு பதிலளித்த அமெரிக்க காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பில் ஜோன்சன்
தொழில்துறை தொடர்பான பிரச்சனைகளை தாம் நேரடி கவனத்துக்கே கொண்டு வருவோம் என உறுதியளித்திருந்தார். அது தொடர்பான தடைகளை தாம் நிவர்த்தி செய்வோம். மேலும் எமது அமெரிக்க அரசு வடக்கின் அபிவிருத்தி என்ற விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளது அதற்கு எந்த தடை வருவததைம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியிருந்தார் என தெரிவித்தனர்.