சிதம்பரத்தில் திருமா.. புதுவையில் ரவிக்குமார்? தேர்தலுக்கு தயாராகும் விசிக!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தளுக்கான அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கைகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் திமுக தலைமையில் களம் காணப்போகும் அணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் என பல அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ள இக்கூட்டணி வெற்றிவாய்ப்பு தங்களுக்கு எளிதாகவே இருக்குமென கருதுகிறது.

காரணம், ஜெயா மரணத்திற்கு பின்பான அரசியல் சூழல்கள், நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, கஜா புயல் என திமுகவுக்கு மாற்று அணியாக களம் காணப்போகிறவர்கள் விழிபிதுங்கி நிற்க, தாங்கள் முன்கூட்டிய தேர்தலுக்கான அரசியல் நகர்வுகளை தொடங்கியுள்ளதை அவர்கள் தங்களின் பலமாகவே கருதுகின்றனர்.

அதே சமயம், திமுகவிடமிருந்து 2 இடங்களை பெற்றுள்ள விசிக தலைவர் திருமா, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியிலும், புதுவையில் எழுத்தாளர் ரவிக்குமார் போட்டியிட கூடுமெனவும் தெரிவிக்கின்றனர் விசிகவின் முன்னணி தலைமைகள். சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகள் விசிகவுக்கு எப்போதும் பலமாகவே இருந்துவந்துள்ள சூழலில், திருமாவுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

அதேபோல், இரண்டு இடங்களில் இன்னுமோர் தொகுதியாக விழுப்புரம், திருவள்ளூர், புதுவை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க கூடுமெனவும் தெரிகிறது.