பாகிஸ்தானுக்கு எப்16 விமானத்தை வழங்கியதன் நோக்கம் என்ன? அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தியா!

பாகிஸ்தானுக்கு எந்த நோக்கத்திற்காக எப் 16 விமானம் வழங்கப்பட்டது என அமெரிக்காவை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளது இந்தியா.

கடந்த மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர், புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது ஜெய்ஷ் -இ- முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 44 வீரர்கள் பலியானார்கள்.

ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென குரல்கள் எழுந்த நிலையில்,பாகிஸ்தானிற்குள் ஊடுருவி தீவிரவாத நிலைகளின் மீது அதிரடி தாக்குதல் நடத்தியிருந்தது இந்தியா. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதத்தின் புகலிடமாக உள்ளதாகவும் உலக நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

அதே சமயம், பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அந்நாடு பெற்ற எப் 16 ரக விமானத்தை கொண்டு இந்திய ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முயன்றது பாகிஸ்தான். ஆனால், அந்த விமானம் இந்திய விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், எப் 16 விமானம் எந்த பயன்பாட்டிற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும் எனவும், பாகிஸ்தானின் எப்16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான சாட்சியங்கள் & மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது இந்தியா.