நியூசிலாந்தில் நடந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர் யார்? பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 49-பேரை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றது.அப்போது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள், பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை பொலிஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளன