பரபரப்புக்கு முற்றுப்புள்ளி! ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தார் மகிந்த?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினரின் முழுமையான ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அண்மை காலமாக அந்த கட்சிக்குள் முரண்பாடுகள் நிலவி வந்தன.

இது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ள வைக்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கூட்டு எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தை கோத்தாபய ராஜபக்ச கடந்த வாரம் சமர்பித்திருப்பதாகவும், இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகுவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.