பிக்கு ஒருவர் செய்த மோசமான செயல்! மரத்தில் கட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்

கொடகம பிரதேசத்திலுள்ள பிக்கு ஒருவர் தவறான முறையில் மக்களிடம் நிதிவசூலிப்பில் ஈடுபட்டபோது, ஸ்தலத்திற்கு சென்று குறித்த பிக்குவை கையும் மெய்யுமாக பிடித்த விகாராதிபதி ஒருவர் அவரது காவியுடையை களைந்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிக்குவை பொலிஸாரிடம் பாரமளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொடகம விகாரையின் விகாராதிபதி கூறுகையில் ,குறித்த பிக்கு மோசடிக்காரன் ஒருவனுடன் இணைந்து கிராமங்களுக்கு சென்று மக்களிடம் பணம் வசூலிப்பதாக எனக்கு கடந்த 3 மாத காலமாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தது.

விளம்பரம்Lankasrimarket.com
82
SHARES

இந்நிலையில் இன்று காலை தொலைபேசியில் அழைந்த ஒருவர் குறித்த பிக்கு கிராமம் ஒன்றில் பணம் வசூலிப்பதாக கூறினார். உடனடியாக அங்கு சென்று அவரை அழைத்து வந்தேன். அவர் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும் சிறுநீரக மாற்று சந்திர சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றே பணம் வசூலித்துள்ளார்.

இவரது இச்செயற்பாடானது பௌத்த தர்மத்திற்கும் , கிராம வாசிகளுக்கும் , எனக்கும் அவமானமாகும். எனவே அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன் என்றார்.

பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது காவி உடை களையப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த பிக்கு காணப்பட்டார். பொலிஸார் அவரிடம் காவி உடையை வழங்க முற்பட்டபோது, காவி உடையை கொடுக்கவேண்டாம் என விகாராதிபதி பொலிஸாருக்கு உத்தவிட்டதை அவதானிக்க கூடியதாகவிருந்தது .