அதிகம் பகிருங்கள்!பல்வலிக்கு மருந்தாகும் பீட்ரூட் எப்படி தெரியுமா? முழுசா படிச்சிடுங்க…!

அதிகம் பகிருங்கள்!பல்வலிக்கு மருந்தாகும் பீட்ரூட் எப்படி தெரியுமா? முழுசா படிச்சிடுங்க…!

பல உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து பலவித நோய்களுக்கு மருந்தாகவும் வெளிப்புற பாதிப்புகளுக்கு பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு மஞ்சள். மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்துவதை போல் சரும பாதிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம்.

உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.

அவ்வகையில் பீட்ரூட் உடலுக்கு மிக அருமையான நன்மைகளை தரும் காயாகும். இதனை எவ்வாறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்துகிறோம் என பார்க்கலாமா?

தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.

sick man suffering from heart attack

இதனை ஆய்வு செய்தவர்கள் பேக்கர் ஐடிஐ இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மையமாகும் இது ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது.

சிலர் உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது பீட்ரூட் ஜூஸ் அருந்தியுள்ளனர். உடனடியாக 4 முதல் 5 பாயிண்ட்கள் ரத்த அழுத்தம் குறைந்ததை கண்கூடாகக் கண்டுள்ளனர்.

ஒரேயொரு டோஸ் பீட்ரூட் ஜூஸில் ஏற்பட்டுள்ள இந்த ரத்த அழுத்தக் குறைவு ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே தினசரி அடிப்படையில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நீண்ட நாளைய ரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பீட்ரூட்டில் மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆகியவை உள்ளதோடு, நைட்ரேட் அளவும் அதிகமிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தீக்காயங்களுக்கு – பீட்ரூட் சாறெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீக்காயத்திலன் மீது பூசிவந்தால் புண் விரவில் ஆறும்.

பொடுகு – பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பல்வலிக்கு – பீட்ரூட் சாறை எடுத்து மூக்கினால் உரிஞ்சுங்கள். அவ்வாறு செய்யும்போது தலைவலி, பல்வலி நீங்கும்.

சரும அலர்ஜி – பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வந்தால் அரிப்பு நிற்கும். சரும அலர்ஜி விரைவில் குணமாகும்.

ரத்த விருத்திக்கு – பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

ஸ்டாமினா அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

முதுமை மறதி 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பீட்ரூட் ஜூஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், அதனால் முதுமை மறதி நோய் தடுக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பீட்ருட்டில் உள்ள நைட்ரேட், உடலினுள் செல்லும் போது நைட்ரைட்டுகளாக மாறி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது தான் காரணம்.