வடக்கு மற்றும் கிழக்கில் மக்களே அவதானம்!

வடமேல் மாகாணம், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலை நிலவுகின்றபோது பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் பொதுமக்ளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

குறிப்பாக, அதிகமான நீரை அருந்த வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நுரைச்சோலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சமீப காலமாக இலங்கையில் பல மாவட்டங்களில், சீரான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இந்நிலையில் கடும் வெப்பம் நிலவுவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.