இலங்கை மக்களுக்கு அவசர அறிவித்தல்: மின்சாரம் நிறுத்தப்படும் நேர அட்டவணை இதோ!

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி மின்வெட்டு நேரங்கள் குறித்த அட்டவணையினை நாட்டு மக்களுக்கு மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.30 தொடக்கம் முற்பகல் 11.30 வரை

முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 2.30 வரை

பிற்பகல் 2.30 தொடக்கம் மாலை 5.30 வரை

மாலை 6.30 தொடக்கம் முன்னிரவு 7.30 வரை

முன்னிரவு 7.30 தொடக்கம் இரவு 8.30pm

இரவு 8.30 தொடக்கம் இரவு 9.30 வரை

இதேவளை இந்த தடை சுழற்சி முறையில் மேலும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொது மக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம் என்றும் பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும், பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.