இலங்கை கடலில் கிடைத்த பில்லியன் ரூபா பெறுமதியான சொத்து! யாருக்கு சொந்தம்?

இலங்கையின் தென்கிழக்கு கடலில் கப்பலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கப்பல் அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷிற்கு சொந்தமாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப் தெரவித்துள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளை ஏற்றி வந்த கப்பல் கைப்பற்றப்பட்டது.

இந்த கப்பல் ஆபகானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த சுற்றிவளைப்பில் ஈரான் நாட்டவர்கள் 09 பேர் இருந்துள்ளனர். சுற்றிவளைபபின் போது 500 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் கடலில் கொட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளாார்.

கப்பலில் இருந்து 100 கிலோகிராம் நிறையுடனான ஹெரோயின் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்புடன் நேற்று இரவு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து. அதில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியிலான ஹெரோயின் மீட்கப்பட்டுள்து.