அடுத்த சில தினங்களில் கைதாகும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்?

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்படும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கைது செய்தது.

சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கு அமையவே இவர்களை கைது செய்ததாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ.சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான புஷ்பமித்ர குணவர்தன, சித்ரா ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.