கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி

டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.

இவர்கள் கடந்த ஆண்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அன்றிலிருந்து இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஆரம்பமானது. சுனிதா அருகில் உள்ள இளம் ஆணுடன் பேசுவதை ராஜேஷ் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

அதுமட்டுமின்றி வயது பிரச்சினை காரணமாக இவர்கள் இருவருக்குள்ளும் சிறு சிறு விடயங்கள் கூட ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. இதனால் மணவாழ்க்கை பிடிக்காமல் இருந்தால் சுனிதா இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்து தனது கணவரை கொலை செய்வதற்காக குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை செய்வது குறித்து தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.

பின்னர், கடந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி தனது கணவருக்கு அதிக மயக்கமருந்தினை கலந்து பானத்தில் குடிக்க கொடுத்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்திலேயே கணவர் இறந்துவிட, அவரது உடலை 8 துண்டுகளாக வெட்டி தலையினை தனது குடியிருப்பில் இருந்து சுமார் சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாக்கடை தொட்டியிலும், காலினை அதற்கு அடுத்த தொட்டியிலும் வீசியுள்ளார்.

எஞ்சியுள்ள பாகங்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து தனது படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற 2 நாட்கள் கழித்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது கணவரை காணவில்லை என புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் உரிமையாளர் சுனிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான் இந்த கொலை அம்பலமாகியுள்ளது.

சுனிதாவின் வீட்டை சென்று சுற்றிப்பார்த்த உரிமையாளர், படுக்கையறையில் இருந்த பிளாஸ்டிக் பையை பார்த்து, அதில் என்ன இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சுனிதா முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த உரிமையாளர் அந்த பையை திறந்துபார்த்தபோது அதில் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை தொடர்பாக சுனிதா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் நடந்த சம்பவத்தை பொலிஸாரிடம் வாக்குமூலமாக அளித்ததையடுத்து தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.