விடுதலைப் புலிகளின் நிறுவனத்தின் வசமாகும் ஸ்ரீலங்கன் விமான சேவை

விடுதலைப் புலிகளின் நிதி ஒதுக்கீடுகளுடன் செயற்படும் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தேசிய சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக விஜேபதிரன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அந்த சங்கம் நேற்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளின் நிதி ஒதுக்கீடுகளுடன் செயற்படும் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் இரண்டு அதிக இலாபகரமான துணை நிறுவனங்கள் இரண்டை அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில, அத்தகைய ஒப்பந்தத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SriLankan Airlines to be sold to LTTE-funded company, trade unions claim